எதிர்க்கட்சிகளின் குரலை அடக்குவதில் மட்டுமே திமுக அரசு தெளிவாக இருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

திருக்கழுகுன்றத்தில் அதிமுக நிர்வாகி தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்க முயன்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தனது எக்ஸ்-சைட் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆட்சியின் அவலங்களை மக்கள் அறியக்கூடாது என்பதற்காக எதிர்க்கட்சிகளின் குரலை அடக்குவதில் மட்டுமே திமுக அரசு தெளிவாக இருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், ஆக்கப்பூர்வமாக ஆட்சி செய்து மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் திமுக அரசுக்கு சிறிதும் இல்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

போராட்டத்திற்கு முன்பு அதிமுக உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டது கோழைத்தனத்தின் உச்சம் என்றும், அதிமுக நிர்வாகியைத் தாக்கியவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

Facebook Comments Box