நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் வீட்டில் சம்மனை ஒட்டிச் செல்வதற்காக தனி பலகை வைக்கப்பட்டுள்ளது.

2011 ஆம் ஆண்டு சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் திரைப்பட நடிகை விஜயலட்சுமி அளித்த புகார் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகக் கோரி நீலாங்கரையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் வீட்டில் போலீசார் நேற்று சம்மன் ஒட்டியுள்ளனர்.

காவலர் அமல்ராஜ் அதை கிழித்ததால் போலீசாருக்கும் அவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. முன்னாள் ராணுவ வீரர் அமல்ராஜ் வைத்திருந்த துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்து கைது செய்தனர். இந்த நிலையில், அமல்ராஜை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, சம்மன் ஒட்டிச் செல்வதற்காக சீமானின் வீட்டு வாசலில் இன்று காலை தனி பலகை வைக்கப்பட்டுள்ளது. வெள்ளைப் பலகையில், “சம்மனை ஒட்டு சார்வு செய்ய விரும்பும் காவல் அதிகாரிகள் இங்கே ஒட்டிச்செல்லவும்” என்று மார்க்கர் பேனாவில் எழுதப்பட்டுள்ளது. இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Facebook Comments Box