அரசியலில் நுழைந்த விஜய், முதலமைச்சராக இன்னும் 50 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியுள்ளது என்று பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் விமர்சித்துள்ளார்.
தியாகராஜ பாகவதரின் பிறந்தநாளையொட்டி, திருச்சியில் உள்ள அவரது மணிமண்டபத்தில் ராம ஸ்ரீனிவாசன் அஞ்சலி செலுத்தினார். இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைத்தவுடன் செயல்படுத்தப்படும் முதல் திட்டம் விஸ்வகர்மாவாக இருக்கும் என்று கூறினார்.
படங்களில் பஞ்ச் டயலாக்குகளைப் பேசிவிட்டு, தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிப்பேன் என்று விஜய் கூறுவது வேடிக்கையாக உள்ளது என்றும் அவர் கூறினார்.
Facebook Comments Box