WhatsApp Channel
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ரூ.393 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு மற்றும் புறநகர் பகுதிகளில் சாலைகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், தென் மாவட்டங்களுக்குச் செல்லும் மக்கள் எளிதாகப் பயணிக்கவும் வண்டலூர் அருகே கிளாம்பாச்சில் ரூ.393 கோடியே 74 லட்சத்தில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. . இந்த பேருந்து நிலையத்திற்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த பேருந்து நிலையத்தில் கடந்த 12ஆம் தேதி 100க்கும் மேற்பட்ட பேருந்துகளின் முதற்கட்ட சோதனை ஓட்டம் நடத்தப்பட்டதை அடுத்து இன்று திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார். பேருந்து நிலைய கல்வெட்டு மற்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையையும் முதல்வர் திறந்து வைத்தார். பின்னர் பேட்டரி காரில் அமர்ந்து பேருந்து நிலையத்தை பார்வையிட்டார்.
அதன்பின் பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் பஸ்களை கொடியசைத்து துவக்கி வைத்தார். இதையடுத்து விரைவு பஸ்கள், மாநகர பஸ்கள் புறப்பட்டு சென்றன.
Discussion about this post