தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியாதா? – சீமான் கேள்வி

பீகார் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிந்திருக்கும்போது, தமிழகத்தில் ஏன் அதனை மேற்கொள்ள முடியாது? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசுதான் நடத்த வேண்டும் என்றால், மாநில உரிமை பற்றி பேசுவது ஏன்?” என கடுமையாக விமர்சித்தார்.

மேலும், “இடஒதுக்கீட்டை வழங்க அதிகாரம் இருப்பின், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த அதிகாரம் இல்லையா? தேர்தல் காலம் வந்தால் பழைய வேடத்தை மாற்றிக்கொண்டு, புதிய உள்தண்டல்களை செய்கிறார்கள்!” என்று அரசியல் கட்சிகளை குறிவைத்து சீமான் விமர்சித்தார்.

சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசுதான் நடத்த வேண்டும் என்றால், மாநில உரிமை பற்றி பேசுவது ஏன்? சீமான் கேள்வி

Facebook Comments Box