கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே 100க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் பாஜகவில் இணைந்தனர்.
சூளகிரியை அடுத்த பெரிய ஷிகரலா பள்ளி பகுதியில் முஸ்லிம்கள் பாஜகவில் சேருவதற்கான விழா நடைபெற்றது. கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத் தலைவர் நாராயணன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், பாஜக தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
விழாவில் வேலூர் இப்ராஹிம் முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் பாஜகவில் இணைந்தனர்.
Facebook Comments Box