“நான் திமுக-காரன். நாங்கள்தான் ஆளுங்கட்சி… உன் குடும்பத்தை லாரி ஏத்தி கொலை செய்வேன்” – மிரட்டிய உடன்பிறப்பு…! “I am DMK-Karan. We are the ruling party … I will kill your family by lorry” – Intimidated Sibling …!
“நான் திமுக-காரன். நாங்கள்தான் ஆளும் கட்சியாகவும் இருக்கிறோம். நீ, எடுத்த வீடியோவை என்கிட்ட கொடுத்துடு. என் பதவிக்கு ஏதாவது பிரச்னை ஆச்சுன்னா, நீ உட்பட உன் குடும்பத்தில் இருக்க ஒவ்வொருத்தரா லாரி ஏத்தி கொன்னுடுவேன்” என வரதட்சணை கொடுமை செய்து மனைவியை மிரட்டிய தி.மு.க மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சுந்தர் மீது காவல்துறை வழக்கு பதிந்துள்ளது.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் ஆர்.எஸ்.நகரைச் சேர்ந்தவர் சுந்தர். இவர், தி.மு.க-வில் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளராகப் பொறுப்பு வகிக்கிறார். இவரது மனைவி வித்யா, திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகின்றன மூன்று குழந்தைகள் வேறு உள்ளன. மேலும் வித்யா வீட்டிலிருந்து வரதட்சணையாக 35 பவுன் நகை வாங்கி அதனை வைத்து தொழில் துவங்கியிருக்கிறார்.
பின்னாளில் தொழில் வேறு சரியாக செய்யாமல் பெண்கள் சிலருடன் சுந்தர் தவறான தொடர்பு வைத்திருந்தததையும், தனி அறைக்குள் கதவைப் பூட்டிக்கொண்டு பெண்கள் சிலருடன் போனில் ஆபாசமாக கொஞ்சி பேசுவதை கேட்டும் அதிர்ந்து போயிருக்கிறார் மனைவி வித்யா. மேலும் இரவில் வேறு பெண்கள் வீட்டிற்கு வேறு சென்றுவிடுவாராம், இரவில் வெளியில் செல்லும் பழக்கத்தையும் விட்டுவிடுமாறு மனைவி வற்புறுத்தியிருக்கிறார்.
இந்த நிலையில், மாமியார் வீட்டிலிருந்து மேலும் பணம் வாங்கி வந்தால்தான் சேர்ந்து வாழ்வேன் என்றுகூறி கடந்தாண்டு டிசம்பர் மாதம் 27-ஆம் தேதி மனைவியை வீட்டிலிருந்து அடித்து துரத்திவிட்டாராம் சுந்தர். இதனை தொடர்ந்து செட்டிக்குப்பம் என்ற பகுதியிலுள்ள பெண் ஒருவருடன் சுந்தருக்குத் தவறான தொடர்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் மனைவி வித்யாவுக்குத் தெரியவந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 29-ஆம் தேதி இரவு 10 மணியளவில், அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார் சுந்தர். இதையறிந்த வித்யாவும், அவரின் உறவினர்களும் அங்குச் சென்றுள்ளனர். அந்த வயதான பெண்ணுடன் சுந்தர் ஓர் அறையில் பெட் காபி குடித்து கொண்டிருந்தாகவும் கூறப்படுகிறது. அதனைப் பார்த்து, வித்யா அதிர்ச்சியடைந்திருக்கிறார். அந்த வீட்டுக்குள் புகுந்து கணவன் சுந்தரைக் கன்னம் பழுக்க அறைந்திருக்கிறார் வித்யா.
பின்னாளில் சுந்தர் மனைவிக்கும், அவரின் குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றம்சாட்டுகிறார் வித்யா. “நான் தி.மு.க-காரன். நாங்கள்தான் ஆளும் கட்சியாகவும் இருக்கிறோம். நீ, எடுத்த வீடியோவை என்கிட்ட கொடுத்துடு. என் பதவிக்கு ஏதாவது பிரச்னை ஆச்சுன்னா, நீ உட்பட உன் குடும்பத்தில் இருக்க ஒவ்வொருத்தரா லாரி ஏத்தி கொன்னுடுவேன்” என மிரட்டியுள்ளார்.
இதனை தொடர்ந்து, வித்யா போலீசில் சுந்தர் மீது புகார் தர, புகாரை பெற்றுகொண்ட போலீசார் சுந்தரை தொடர்புகொண்டபோது சுந்தரோ, “எனக்கு வேலை இருக்கிறது. ஆளும் கட்சிக்காரனையே ஸ்டேஷனுக்குக் கூப்பிடுறீங்களா?” என்று மிரட்டல் விடும் தொனியில் பேசியதாகக் காவல்துறை தரப்பில் கூறுகிறார்கள். இதையடுத்து, மனைவியிடம் வரதட்சணைக் கேட்ட குற்றம், கொலை மிரட்டல் ஆகியவைத் தொடர்பாக தி.மு.க நிர்வாகி சுந்தர் மீது போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
காஷ்மீரின் அரசியல் நிலவரம்: புதிய காங்கிரஸ் ஆட்சி மற்றும் அதன் பிறகான உள்நாட்டு சிக்கல்கள் காஷ்மீர், இந்திய அரசியலில் ஒரு நுண்ணிய மற்றும் தடுமாறும் பிரதேசமாக இருந்தது....
லெபனான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது. காசாவில் ஹமாஸ் போராளிகள் கட்டியெழுப்பியது போல், ஹிஸ்புல்லா போராளிகள் லெபனானில் ஏராளமான சுரங்கங்களை கட்டியுள்ளனர். ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளுக்கு சுரங்கம்...
மற்ற அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது என்ற விதி அதிமுகவில் இல்லை என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். தளவாய் சுந்தரம் நீக்கப்பட்டது தவறானது என்றும் அவர்...
பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி வாழ்த்து பெற்றார். இந்நிலையில், ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனியை பிரதமர் மோடி சந்தித்து,...
Discussion about this post