”திமுக., எப்போதுமே கோயில்களுக்கு எதிரானது. ஹிந்து கோயில்களை விட்டு அறநிலையத்துறை வெளியேற வேண்டும்” என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறினார்.
தீ விபத்தில் சேதம் அடைந்த மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலை பார்வையிட்ட பின் மேலும் அவர் கூறியதாவது: தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் கோயில்களை சரிவர பராமரிக்க மாட்டார்கள். ஆனால் கோயில் வருமானத்தை கொண்டு வேறு செலவு செய்வார்கள். இனி அரசு இப்படி செய்யாது என்று நம்புகிறேன். அறநிலையத்துறை ஹிந்து கோயில்களில் இருந்து வெளியேற வேண்டும். கோயில் நிர்வாகத்தை பக்தர்கள் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும்.
மண்டைக்காடு கோயிலில் தீவிபத்து ஏற்படும் வரை அலட்சியமாக இருந்த அதிகாரிகள், பூஜாரிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரள பாரம்பரிய முறைப்படி செயல்படும் இந்த கோயிலை பழமை மாறாமல் அப்படியே புதுப்பிக்க வேண்டும். மேற்கூரை எரிந்த நிலையில் தங்க தகடுகளால் ஆன மேற்கூரை அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Discussion about this post