தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவதா இல்லையா என்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்பட பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றுள்ளனர். 
தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, பள்ளிக் கல்வி செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார், தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி உள்ளிட்டோர் ஆலோசனையில் கலந்துகொண்டுள்ளனர். 
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், மாநிலப் பாடத்திட்டத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது. 
Facebook Comments Box