குமரியில் கருப்பு பூஞ்சை நோய்க்கு தொழில் அதிபர் ஒருவர் உயிரிழந்த நிலையில், மேலும் 5 பேர்களுக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதாக மருத்துவமனை வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
குமரி மாவட்டம் நாகர்கோவிலில் 49 வயதான தொழில் அதிபர் ஒருவர் கொரோனா தொற்று ஏற்பட்டு கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருதுவமனையில் சிகச்சை பெற்று வந்தார். நோய் குணமாகி வீட்டுக்கு சென்ற மறுநாளே அவருக்கு கண் வழி ஏற்பட்டது. தொடர்ந்து கண்ணில் இருந்து நீர் வடிய தொடங்கியது. இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் மயங்கி விழுந்துள்ளார்.பின்னர் கொரோனா சிகிச்சை பெற்ற அரசு மருத்துவ கல்லூரிக்கே அவரை சிகிர்சைகாக கொண்டு அவரை சேர்ந்துள்ளனர்.
மருத்துவர்கள் அவரை பரிசோதித்ததில் அவருக்கு கருப்பு பூஞ்சை நோய் இருப்பது உறுதி செய்யபட்டது.
மருத்துவர்கள் அவரை தீவீர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கருப்பு பூஞ்சை நோயால் குமரியில் முதல் நோயாளி இறந்துள்ளது மருத்துவர்கள் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 5 பேர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய்க்கு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. கொரோனா ஒருபுறம் இருக்க கருப்பு பூஞ்சையால் தொழிலதிபர் ஒருவர் இறந்தது குமரி மாவட்ட மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post