தமிழகத்தில் 2016ம் ஆண்டு திமுக சார்பில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் கே.எஸ் மஸ்தான் .இந்நிலையில் தற்போது (2011)நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் திமுக சார்பில் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் தற்போது சிறுபான்மை நலத் துறை அமைச்சராக பணியாற்றி வருகிறார் இந்நிலையில் அமைச்சர் கே.எஸ் மஸ்தானுக்குகே.எஸ் தஸ்தகீர் என்ற சகோதரர் உள்ளார் . இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பாக கொரோனா தொற்று ஏற்பட்டு சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் .
கொரோனா தொற்றிலிருந்து மீண்ட கே.எஸ் தஸ்தகீர் நுரையீரல் பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை (30-5-2021)சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இதனை அடுத்து தற்போது நிலவி வரும் கொரோனா பரவல் காரணமாக அரசு சார்ந்த அலுவலர்களும் திமுகவினை சார்ந்த நிர்வாகிகளும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்த நேரில் வரவேண்டாம் என்று அமைச்சர் கே.எஸ் மாஸ்தான் அவர்கள் கூறியுள்ளார். இந்த நிலையில் நுரையீரல் பிரச்சனை காரணமாக உயிரிலந்த கே.எஸ் தஸ்தகிருக்கு ஒரு மனைவியும் ஒரு மகனும் 2 மகள்களும் உள்ளனர். சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சரின் சகோதரர் மரணத்தால் திமுக தொண்டர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
Facebook Comments Box