தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருவதால், கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அது மே 23-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதில் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குறைந்த கொரோனா பாதிப்பு, மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனா பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு முழுமையாக நடைமுறைபடுத்தவில்லை என்று அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் விமர்சனம் செய்துள்ளார். ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தியதால் டெல்லியில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.
கருப்பு பூஞ்சை நோயை ஆரம்பத்திலேயே போக்கும் வகையில் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
Facebook Comments Box