நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள வானதி சீனிவாசன் நேற்று சட்டமன்ற பேரவையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். ஒரு பக்கம் பதவி பிரமாணம் செய்துகொண்ட மகிழ்ச்சியாக தருணத்தில் அவர் வீட்டில் ஒரு துக்க சம்பவம் நடந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இது தொடர்பாக வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- என் தன்பு யுவராஜ் நேற்று கொரானாவால் இவ்வுலகை விட்டு பிரிந்தான். “எம் அக்கா” என்ற வார்த்தைக்கு உயிர் கொடுத்தவன், என் நிழலாக வாழ்ந்தவன், எனக்கு தீராத துக்கமாக மாறினான்…ஓம்சாந்தி. என்று துக்கமுடன் தெரிவித்திருக்கிறார் வானதி சீனிவாசனின் தம்பி மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Facebook Comments Box