தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த 7-ம் தேதி பொறுப்பேற்றார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில்அதன் கூடுதல் செயல் அதிகாரி தர்மா ரெட்டி தலைமையில் அர்ச்சகர்கள், வேதபண்டிதர்கள் நேற்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் ஸ்டாலின் இல்லத்துக்கு வந்தனர். அப்போது திருமலை திருப்பதி திருக்கோயில் பிரசாதத்தை வழங்கி வேத பண்டிதர்கள் ஆசி வழங்கினர்.
Facebook Comments Box