தி.மு.க தென் சென்னை மாவட்டம், தி.நகர் பகுதிக்கு உட்பட்ட வடபழனியில், ஆற்காடு சாலை தபால் நிலையத்துக்கு எதிரே தி.மு.க-வின் அலுவலகம் அமைந்துள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ கு.க.செல்வம் தி.மு.க-வில் இருந்தபோது கட்டப்பட்டது. பேரறிஞர் அண்ணா நூலகம், உடற்பயிற்சிக் கூடம், மருத்துவ முகாம், இலவச குடிநீர் என பல தரப்பட்ட அம்சங்களுடன் அமைக்கப்பட்டது இந்த அலுவலகம்.

கு.க.செல்வம் கட்சியுடனான தொடர்பில் இருந்து விலகியதும் அலுவலகத்தை பராமரிக்கவும் ஆளில்லாமல் போய்விட்டது. கு.க.செல்வம் கட்சியில் இருந்தபோது பிரதமர் மோடி மற்றும் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் படங்களை வாசலிலேயே, அண்ணா, கருணாநிதி மற்றும் முதல்வர் ஸ்டாலின் படத்துக்கு அருகே ஒட்டியிருந்தனர்.

Facebook Comments Box