திமுக தலைவர் ஸ்டாலின் கோடை காலம் வந்து விட்டதால் தமிழகம் முழுவதும் தண்ணீர் பந்தலை திறந்து வையுங்கள் என்று சமீபத்தில் உத்தரவிட்டார். அவரது உத்தரவுக்கு ஏற்ப சில இடங்களில் தண்ணீர் பந்தலை அமைத்து அதில் முதல் நாள் மட்டும் பிளாஸ்டிக் கேன்களில் தண்ணீர் வைத்து, போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர்.
அதனை சில பத்திரிகைகளுக்கு கொடுத்து செய்தியாக போட்டுக்கொண்டனர். இதனை அனைவரும் அறிந்ததே. அந்த வகையில், விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் கடை வீதியில் திமுக சார்பில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அக்கட்சியின் நிர்வாகிகள் தண்ணீர் பந்தலை திறந்தனர்.
அன்று ஒரு நாள் மட்டும் பிளாஸ்டிக் கேனில் தண்ணீர் வைத்தனர். அடுத்த நாளில் இருந்து தண்ணீர் வைக்கப்பட்டிருந்த கேன் காணாமல் போயிருந்தது. திமுக தலைவர் ஸ்டாலினும் மக்களிடம் ஓட்டு வாங்குவதற்காக எப்படி எல்லாம் நாடகம் போட்டு வருகிறார். அதே போன்று ஏமாற்றும் வேலைகளை அவரது கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும் செய்து வருகின்றனர் என சமூக ஆர்வலர்களும் கூறி வருகின்றனர்.
Facebook Comments Box