தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் பாரதீய ஜனதா கட்சி நடிகை குஷ்பு போட்டியிடுகிறார்.தனக்கான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுது ANI செய்தியாளருக்கு சிறப்பு பேட்டியில் ஒவ்வொரு பெண் குழந்தைகளின் கணக்கில் ரூ .1 லட்சம் டெபாசிட் செய்வதாகக் வாக்குறுதியை அளித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில் பெண்கள் பொருளாதார ரீதியாக சுதந்திரமாக இருப்பது மிகவும் முக்கியம். ஒரு பெண் குழந்தை பிறந்தவுடன் , நான் ரூ.1 லட்சத்தை அவளது கணக்கில் வைப்பேன், இதனால் அவள் வளர எளிதாகிறது”.

மாநிலத்தின் வளர்ச்சிக்காக ஒரு பங்கு வழங்கப்படுகிறது.இது குறைந்த பட்சம் பெண் குழந்தைகளின் சிசுக்கொலைகளை தடுக்க உதவும் என்று அவர் தெரிவித்தார்.

Facebook Comments Box