லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ்… நாயகியாகப் புதுமுகம் கீத்திகா திவாரி

0
 

தனது லெஜண்ட் சரவணா விளம்பரங்களில் மட்டுமே நடித்து வந்தவர் லெஜண்ட் சரவணன்.

தான் நடித்த விளம்பரங்களை இயக்கிய ஜேடி – ஜெர்ரியின் இயக்கத்தில் நடிக்கத் தொடங்கினார் லெஜண்ட் சரவணன்.

சரவணனுக்கு நாயகியாகப் புதுமுகம் கீத்திகா திவாரி நடித்து வருகிறார்.

இதில், சண்டைக் காட்சி ஒன்றைப் படமாக்கி வருகிறது படக்குழு. இதில் லெஜண்ட் சரவணன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இந்தப் படத்தில் லெஜண்ட் சரவணனுடன் பிரபு, விவேக், விஜயகுமார், நாசர், தம்பி ராமையா, காளி வெங்கட், மயில்சாமி, லதா, கோவை சரளா, தேவி மகேஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகிறார்கள்.

வேல்ராஜ் ஒளிப்பதிவாளராகவும், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராகவும், வசனகர்த்தாவாக பட்டுக்கோட்டை பிரபாகரும், எடிட்டராக ரூபனும் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு மணாலியில் நடைபெற்று வருகிறது. சரவணன் மற்றும் படக்குழுவினர் மணாலிக்கு படப்பிடிப்புக்குச் சென்றுள்ளனர். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here