புதுச்சேரி அரசின் ஊழல் குறித்து குடியரசுத் தலைவரிடம் புகார் அளிக்க காங்கிரஸ் நடவடிக்கை

புதுச்சேரி அரசின் ஊழல் குறித்து குடியரசுத் தலைவரிடம் புகார் அளிக்க காங்கிரஸ் நடவடிக்கை

புதுவையில் நடைபெறும் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி அரசின் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து புகார் அளிக்க காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான நேரத்தை ஒதுக்குமாறு கோரி, கட்சி சார்பில் இவ்வாரம் அரசுத் தலைமைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்பின், ஒரிரு நாட்களில் டெல்லி பயணம் மேற்கொள்ளும் திட்டம் காங்கிரஸ் குழுவால் தயாரிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங் – பாஜக ஆட்சி, தொடக்கத்திலிருந்தே காங்கிரசின் கடும் விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது. முன்னாள் முதல்வர் நாராயணசாமி, ஆட்சியில் நடைபெறும் ஊழல்களை தொடர்ந்து பொது மன்றங்கள் மற்றும் செய்தியாளர்கள் சந்திப்புகள் வழியாக குற்றஞ்சாட்டி வருகிறார். குறிப்பாக,

இதைத் தொடர்ந்து, “அதிகாரப்பூர்வமாக துறைவாரியாக அனைத்து ஊழல்களையும் தொகுத்து பட்டியலாக தயார் செய்துள்ளோம். அந்த பட்டியலை குடியரசுத் தலைவரிடம் வழங்க உள்ளோம்” என நாராயணசாமி தெரிவித்திருந்தார்.

இதன் அடிப்படையில், மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்பி தலைமையில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், கமல் கண்ணன், மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட 20 பேர் கொண்ட காங்கிரஸ் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

இக்குழுவினர், ஜூலை 23 அல்லது 24ம் தேதிகளில் குடியரசுத் தலைவரை சந்திக்க நேரம் ஒதுக்க கேட்டுள்ளனர்.

புகார் மனுவுடன் தேவையான ஆதாரங்களும் எடுத்துச் செல்லப்பட உள்ளன.

மேலும், டெல்லி செல்லும் குழுவினர் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரை சந்தித்து, புதுச்சேரி அரசியலில் நடக்கும் நிலைமைகள், ஆளும் கூட்டணியின் ஊழல் குற்றச்சாட்டுகள் ஆகியவை குறித்து ஆலோசிக்க திட்டமிட்டுள்ளனர்.

குடியரசுத் தலைவர் நேரம் ஒதுக்கியதும், காங்கிரஸ் குழு உடனடியாக புதுச்சேரியில் இருந்து புறப்பட உள்ளது என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

Facebook Comments Box