அரசுப் பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி தொடக்கம்!

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி தொடக்கம்!

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு தற்காப்புக் கலையை கற்றுக் கொடுக்க ரூ.15.48 கோடி தொகையை பள்ளிக் கல்வித் துறை ஒதுக்கியுள்ளது.

இது தொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் மாநில இயக்குநரகத்திலிருந்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

தற்போதைய 2024-25 கல்வியாண்டிற்கான தற்காப்புப் பயிற்சிக்காக, 6,045 நடுநிலைப் பள்ளிகளுக்காக ரூ.7.25 கோடி மற்றும் 5,804 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்காக ரூ.8.23 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியை பயன்படுத்தி மாணவிகளுக்கு கராத்தே, ஜூடோ, சிலம்பம் போன்ற தற்காப்புப் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். மேலும், பென்சில், பேனா போன்ற எளிதாக கையில் கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி தங்களை பாதுகாப்பது குறித்தும் கற்றுத்தர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Facebook Comments Box