‘நான் துணை முதல்வராக இருக்க வேண்டுமா என்பதைக் தீர்மானிக்க வேண்டும் அது நான் தான்; எடப்பாடி அல்ல’ – துரைமுருகன்

‘நான் துணை முதல்வராக இருக்க வேண்டுமா என்பதைக் தீர்மானிக்க வேண்டும் அது நான் தான்; எடப்பாடி அல்ல’ – துரைமுருகன்

துணை முதல்வர் பதவியை தக்கவைத்துக் கொள்ள வேண்டுமா இல்லையா என்பதைக் குறித்து முடிவெடுக்கக் கூடியவர் தான் தான் என்பதை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்; இதில் எடப்பாடி பழனிசாமிக்கு உரிமையில்லை எனவும் கூறியுள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள தேன்பள்ளி கிராமத்தில் இன்று (ஜூலை 25) நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் சிறப்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் வி.ஆர். சுப்பு லட்சுமி தலைமையிலான கூட்டத்தில் துரைமுருகன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளிடம் வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய துரைமுருகன், “ஒரே தொகுதியில் தொடர்ந்து வெற்றிபெறுவது எப்படி என்பதைக் கேட்பவர்கள் இருக்கின்றனர். அவர்கள் அதை வெறும் தொகுதியாக பார்க்கிறார்கள். ஆனால், நான் என் தொகுதியை ஒரு கோவிலாகவே நினைக்கிறேன். அதேபோல், உறுப்பினர்கள் ஒழுக்கத்தில் இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “திமுகவின் 523 வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றப்பட்டன என எடப்பாடி கேட்கிறார். ஆனால், அவர்களது ஆட்சியில் எத்தனை வாக்குறுதிகள் வழங்கப்பட்டன? அவற்றில் எத்தனை செயல்படுத்தப்பட்டன? என்பதை கூட சேர்த்து கணக்கிடலாம்” என்றார்.

மேலும், “திமுக அரசில் மூத்த அமைச்சர் எனும் வகையில் துரைமுருகனுக்கு துணை முதல்வர் பதவியளிக்காமல், உதயநிதிக்கு அந்த பதவி கொடுக்கப்பட்டது என்பது தான் கடந்த நான்கு ஆண்டுகளுக்கான திமுகவின் சாதனை” என எடப்பாடி பழனிசாமி கூறியதற்காக, “நான் அந்த பதவியில் இருப்பதா இல்லையா என்பதை தீர்மானிக்கிறவர் நான்தான், எடப்பாடி பழனிசாமி அல்ல” எனத் தெரிவித்தார்.

Facebook Comments Box