பாட்மின்டனில் வெண்கல பதக்கம் கைப்பற்றிய தன்வி ஷர்மா!

பாட்மின்டனில் வெண்கல பதக்கம் கைப்பற்றிய தன்வி ஷர்மா!

ஆசிய ஜூனியர் பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீராங்கனைகள் தன்வி ஷர்மா மற்றும் வெண்ணால கலகோட்லா வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர்.

இந்தோனேஷியாவின் சோலோ நகரில் ஆசிய ஜூனியர் பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்திய வீராங்கனை தன்வி ஷர்மா, சீனாவின் யின் யி குயிங்கிடம் 13-21, 14-21 என்ற நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

இதேபோல, மற்றொரு இந்திய வீராங்கனை வெண்ணால கலகோட்லா, சீனாவின் லியு ஷி யாவிடம் 15-21, 18-21 என்ற செட் கணக்கில் பராசயாகினார். அரை இறுதியில் தோல்வியடைந்த இருவரும் வெண்கலப் பதக்கத்துடன் தொடரை முடித்துள்ளனர்.

Facebook Comments Box