சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆர்டிஐ இணையதள முகவரி வெளியீடு

சென்னை உயர் நீதிமன்றம் தொடர்பான தகவல் அறியும் உரிமை (RTI) சட்டத்திற்கான இணையதள முகவரி வெளியிடப்பட்டுள்ளது.

இதைச் சுட்டி உயர் நீதிமன்ற பதிவாளர் எஸ். அல்லி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களை சார்ந்த தகவல்களை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறுவதற்காக, https://mhc.tn.gov.in/eservices/rti என்ற புதிய இணையதள முகப்பை தொடங்கி இருக்கின்றோம்.

இந்த இணையதளத்தின் பயன்பாடு தொடர்பான வழிகாட்டி, சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments Box