தமிழகத்தில் அறு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு

தமிழகத்தில் அறு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு

தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று (ஜூலை 29) முதல் ஆகஸ்ட் 3 வரை எனும் 6 நாள்களுக்கு ஓரளவு மழை பெய்யக்கூடிய சூழ்நிலை காணப்படுகின்றது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கையில், “மேற்கு திசையிலிருந்து வீசும் காற்றில் வேகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சில பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளது. ஜூலை 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் சில பகுதிகளில் லேசான மழை இருக்கலாம். ஆகஸ்ட் 1, 2 மற்றும் 3 ஆகிய நாட்களிலும் பரவலான பகுதிகளில் மிதமான மழை பெய்யும் சாத்தியம் இருக்கிறது.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படலாம். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

தென் தமிழக கடலோரங்கள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்துடன், இடைவேளைகளில் 60 கிமீ வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால், இந்த பகுதிகளில் கடலுக்கு செல்ல மீனவர்கள் தவிர்க்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முந்தைய 24 மணி நேரத்தில் (நேற்று காலை 8.30 மணி வரை) பதிவான மழை அளவுகளின்படி, அதிக மழை அளவுகள் கீழ்க்கண்ட பகுதிகளில் பதிவாகியுள்ளது:

  • கோவை மாவட்டம் சின்னக்கல்லார், நீலகிரி மாவட்டம் நடுவட்டம் – தலா 4 செ.மீ.
  • கோவை மாவட்டம் சோலையார் – 3 செ.மீ.
  • வால்பாறை, சின்கோனா, ஆனைமலை, தொண்டாமுத்தூர், நெய்யூர் (கன்னியாகுமரி), குண்டாறு அணை (தென்காசி), கிளன்மார்கன், செருமுள்ளி, மேல் பவானி, பார்வூட் (நீலகிரி) – தலா 2 செ.மீ.

எனச் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments Box