தமிழக கவுரவ விரிவுரையாளர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
தமிழகத்தில் கவுரவ விரிவுரையாளர்களின் சேவையை மதித்து, அவர்களுக்கு நிரந்தரப் பணி வழங்கப்பட வேண்டுமென முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் தற்போது 180 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 35 புதிய கல்லூரிகள் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டுள்ளன. குறிப்பாக 2025-2026 கல்வியாண்டில் மட்டும் 15 புதிய அரசு கல்லூரிகள் தொடங்கப்பட்டதோடு, அதனுடன் இணைந்து 253 புதிய பாடப்பிரிவுகளும் தொடங்கப்பட்டுள்ளன,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இவ்வளவு புதிய கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகள் உருவாக்கப்பட்ட போதும், ஒரு புதிய உதவிப் பேராசிரியரையும் அரசு நியமிக்கவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
தற்போது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் 14,000 இருக்க, அதில் சுமார் 5,000 பேர்தான் நிரந்தரப் பணியில் உள்ளனர். மீதமுள்ள சுமார் 8,000 பேர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மாதம் ரூ.25,000 தொகுப்பு ஊதியத்தில் ‘கவுரவ விரிவுரையாளர்களாக’ பணியாற்றி வருகிறார்கள்.
இவர்கள் பெரும்பாலானோர் முதுகலைப் பட்டம், எம்.பில், பிஎச்.டி., தேசியத் தகுதித் தேர்வு (NET), மாநிலத் தகுதித் தேர்வு (SET) போன்றவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைக்கும் ஊதியமும், அரசு அங்கீகரிக்கும் உரிமைகளும் இவர்களுக்கு கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் பலத்த மனவேதனையிலும், விரக்தியிலும் உள்ளனர்.
மேலும், உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்ட போதும், உயர்நீதிமன்ற உத்தரவால் அந்த அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு, மேலும் 500 பேரை கவுரவ விரிவுரையாளர்களாக தற்காலிகமாக நியமிக்க திமுக அரசு முயற்சி எடுத்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலைமை கல்வி தரத்தையும், மாணவர்களின் சேர்க்கையையும் பாதித்து வருகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 16,000 பேர் குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, உயர்கல்வித் துறையின் வளர்ச்சிக்காகவும், பணியில் உள்ள விரிவுரையாளர்களின் வாழ்வாதார நிலையை உறுதி செய்யவும்,