செந்தில் பாலாஜிக்கு எதிரான விசாரணை ஆயுள் முழுவதும் முடிவடைய வாய்ப்பு இல்லை… உச்ச நீதிமன்றம்

செந்தில் பாலாஜிக்கு எதிரான விசாரணை ஆயுள் முழுவதும் முடிவடைய வாய்ப்பு இல்லை என குற்றம் சாட்டப்பட்ட 2,000 பேரையும் விசாரிக்க வேண்டுமானால் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

போக்குவரத்து துறையில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தருவதாக நிதி பெற்ற மோசடி தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், இந்த விசாரணை அவர் வாழ்நாள் முழுவதும் முடிய வாய்ப்பில்லை என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

போக்குவரத்து துறையில் பணிக்காக நிதி பெற்ற சம்பவத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஒய்.பாலாஜி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞராக ஆஜராகிய கோபால் சங்கர நராயணன் வாதமாகக் கூறியதாவது: இந்த லஞ்ச மற்றும் ஊழல் வழக்கில் 2,000-க்கும் அதிகமானோர் மீது குற்றச்சாட்டு விதிக்கப்பட்டுள்ளது. வழக்கு சரியான முறையில் தமிழக போலீசாரால் விசாரிக்கப்படவில்லை. முன்னாள் அமைச்சருக்கு எதிராக குற்றச்சாட்டு உள்ளதால், விசாரணையை தேக்கி வைக்கின்றனர். குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானோர் எண்ணிக்கை பெரிதாக உள்ளதால், விசாரணை விரைவில் முடிய இயலாது. எனவே, முக்கிய குற்றச்சாட்டுக்குரியவர்களை முதலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றார்.

அதற்கு பதிலளித்த நீதிபதிகள் கூறியதாவது: ஒவ்வொரு வழக்கிலும் 900 அல்லது 1000 பேர் வரை குற்றம் சாட்டப்படுகிறார்கள் என்றால், விசாரணை எப்போது நிறைவடையும்? இந்த நிலை தொடரும் பட்சத்தில், பல ஆண்டுகள் கடந்தாலும் இந்த வழக்கு முடிவுக்கு வராது. மேலும், லஞ்சம் கொடுத்தவர்கள் எனக் கூறப்படும் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களும், குற்றம் சாட்டப்பட்ட 2,000 அல்லது 2,500 பேரும் விசாரிக்கப்பட வேண்டும் என்றால், முன்னாள் அமைச்சருக்கு எதிரான விசாரணை வாழ்நாள் முழுவதும் தொடரும் நிலை ஏற்படும்.

அதேபோல, குற்றச்சாட்டுக்குள்ளான நபர்களை மட்டும் குறிக்கோளாகக் கொண்டிருப்பதே எதிர்ப்பார்வையாளரின் நோக்கமாக உள்ளது. இது முறைமையின் மீது நம்பிக்கையை பறிக்கும் செயல். முன்னாள் அமைச்சரைத் தவிர, இடைத்தரகர்கள் யார், அமைச்சரின் பரிந்துரை அடிப்படையில் செயல்பட்ட அதிகாரிகள் யார், வேலைவாய்ப்பு தேர்வு குழு உறுப்பினர்கள் யார், பணம் பெற்றபின் நியமனம் வழங்கிய அதிகாரிகள் யார் என்பது போன்ற விவரங்கள் தேவைப்படுகிறது.

அந்த தொடர்பில், தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். அப்போது, தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மானு சிங்க்வி மற்றும் கூடுதல் தலைமை அரசு வழக்கறிஞர் அமிதா ஆனந்த் திவாரி ஆகியோர், “இந்த முழு வழக்கும், அதனுடன் இணைக்கப்பட்ட வழக்குகளும் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் குறித்த முழுமையான விவரங்களை கொண்ட குறிப்பு ஒன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளோம்” என தெரிவித்தனர். இதையடுத்து, வழக்கு இன்று ஒத்திவைக்கப்பட்டது.

Facebook Comments Box