வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க விண்ணப்பித்து, வாக்காளர் இறுதிப் பட்டியலில் உங்கள் பெயர் இணைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்து கொண்டவர்களா நீங்கள்?
வாக்காளர் அடையாள அட்டை இல்லையே? எவ்வாறு வாக்களிப்பது என்ற கவலை வேண்டாம். புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்த்தவர்களுக்கு, இணையதளம் அல்லது செல்லிடப்பேசி வாயிலாக வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. அதனைப் பயன்படுத்தியும் வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அதற்கான வசதி இல்லாதவர்கள், தேர்தல் ஆணையம் அங்கீகரித்த சில ஆவணங்களைக் கொண்டும் வாக்களிக்கலாம்.
அவையாவன.. 
1. வாக்காளர் அடையாள அட்டை
2. ஆதார் அட்டை
3. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு பணி அட்டை
4. வங்கி / அஞ்சலக கணக்குப் புத்தகம்
5. ஓட்டுநர் உரிமம்
6. மத்திய / மாநில அரசின் பணியாளர் அடையாள அட்டை
7. வருமான வரி நிரந்தர கணக்கு அட்டை (பான் அட்டை)
8. கடவுச் சீட்டு
9. ஓய்வூதிய ஆவணம்
10. ஸ்மார்ட் கார்ட் (தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்தியத் தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்டது.
11. மருத்துவக் காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை
12. நாடாளுமன்ற / சட்டப்பேரவை உறுப்பினர்களது அலுவலக அடையாள அட்டை என இவற்றில் ஏதேனும் ஒன்றைக் காட்டி வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
Facebook Comments Box