வெற்றி வேல்… வீர வேல் எனக்கூறி கோவையில் பிரசாரத்தை தொடங்கிய பிரதமர் மோடி தொடர்ந்து பேசியதாவது;- திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மூர்க்கத்தனமான அரசியலை முன்னெடுக்கிறது. அப்போது, எல்லாம் மக்களுக்கு தொல்லை தருகிறார்கள். ஒரு பெண் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் ஜெயலலிதா.
ஜெயலிலதாவுக்கு தொல்லை கொடுத்தவர்களுக்கு திமுகவும் காங்கிரஸ் கட்சியும் வெகுமதி அளித்தார்கள். திமுகவின் ஆட்சிக் காலத்தில் மிகப்பெரிய மின்வெட்டை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். ஜெயலலிதாவை திமுக எப்படி நடத்தியது என்பதை தமிழக மக்கள் நன்கறிவார்கள். ஒட்டுமொத்த தமிழகத்திற்குமான கட்சி என்ற உரிமையை திமுக இழந்துவிட்டது.
எதிர்க்கட்சிகளுக்கு தங்களின் சுய லாபம் ஒன்றுதான் அரசியல் இலக்கு. திமுக காங்கிரஸின் கூட்டங்கள் ஊழலுக்கான கணிப்பொறி திட்டங்கள் போல் உள்ளன. தங்களின் சட்டைப் பைகளை நிரப்புவதற்காக ஆட்சியை பிடிக்க திமுக காங்கிரஸ் முயற்சி செய்கிறது. ஊழல் செய்வதற்கே தங்களின் மூளையை திமுகவினர் பயன்படுத்துகின்றனர். நம் தேசம் முற்றிலும் வேறுபட்ட அரசியலை பார்க்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி என்பதே கருணையுடன் ஆட்சி, மற்றொன்று காட்டாட்சி. எதிர்க்கட்சியினரின் அரசியல் என்பது துன்புறுத்தக் கூடிய அரசியல் என பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார்.
மேலும், பல ஆண்டுகளாக ஆட்சி நடத்திய திமுக, தேவேந்திர குல வேளாளர்களின் கோரிக்கையை ஏற்பதில்லை. எதிர்க்கட்சியினரின் அரசியல் என்பது துன்புறுத்தக்கூடிய அரசியல். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என்பது கருணையுன் கூடிய ஆட்சி. தேசிய ஜனநாயக கூட்டணி என்பது அனைத்து மாநில விருப்பங்களையும் தேசத்தின் வளர்ச்சியை மையப்படுத்தி உள்ளது என்றார்.
Facebook Comments Box