உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதைமுன்னிட்டு நடிகர் சிம்பு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விடியா ஒன்றை வெளியிட்டுள்ளார். விடியோவில், சக நடிகரும், சிம்புவின் நெருங்கிய நண்பருமான மகத்தின் செல்ல நாயிடம் சிம்பு பேசுகிறார். 
அதில் அவர் பேசியதாவது, நீ பொண்ணு. இப்பதான் நீ வளர்ந்து வந்திருக்க. இப்ப நீ ஒரு பையனை சந்திக்கனும். அந்த பையனோட உனக்கு சில விஷயங்கள் எல்லாம் நடக்கணும். அதுக்கு முதலில் எனக்கு கல்யாணம் நடக்கணும். நான் மட்டும் தனியா இருக்கேன். 
நீ மட்டும் ஜாலியா இருக்கனா அது நியாயம் இல்ல. புரிஞ்சதா பப்பு. என் கஷ்டம் உனக்கு புரியுதா இல்லையா? ஏதாவது பேசு. பரவாயில்லை பரவாயில்லை. எனக்கு அந்த கடவுள் கொடுப்பாரு. வரும்போது வரட்டும். நீ சந்தோஷமா இரு. ஏதாவது சொல்லேன். 
ஆயிடும்னு சொல்லுறீயா. ஆயிடுமா இவ்வாறு அவர் பேசியுள்ளார். சிம்பு கலகலப்பாக பேசும் அந்த விடியோ தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. 

Facebook Comments Box