தமிழகத்தில் ரூ.4, 486 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைக்கிறாா். மேலும், ரூ.3, 640 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அவா் அடிக்கல் நாட்டுகிறாா். இதற்கான நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
கரோனா நோய்த்தொற்று: கரோனா நோய்த்தொற்று உச்சகட்டத்தில் இருந்த போது, பிரதமா், முதல்வா் உள்ளிட்ட தலைவா்கள் நேரடியாக பங்கேற்கும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. கரோனாவுக்குப் பிறகு, நேரடியான நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமா் நரேந்திர மோடி முதல் முறையாக சென்னை வருகிறாா். சென்னைக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு வரும் பிரதமா் நரேந்திர மோடி பிற்பகல் 1.30 மணிக்கு புறப்பட்டு கொச்சி செல்கிறாா்.
மோடி செல்லும் இடங்களில் அவரை வரவேற்கும் விதமாக welcome modi எனும் பதிவும், அதை எதிர்க்கும் விதமாக gobackmodi என்ற ஹேஷ்டேக்கும் அதிகமாகப் பதிவிடப்படும். இந்நிலையில் மோடியின் சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோ பேக் மோடி என்கிற ஹேஷ்டேக்குடன் ட்வீட் செய்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார் கவர்ச்சி நடிகை ஓவியா.
பிக் பாஸ் முதல் சீஸனில் பங்கேற்ற கவர்ச்சி நடிகை ஓவியா, போட்டியை வெல்லாவிட்டாலும் ரசிகர்களின் மனத்தைக் கவர்ந்தார். அவருடைய குணாதிசயங்களுக்கும் துணிச்சலான பேச்சுக்கும் அதிகப் பாராட்டுகள் கிடைத்தன. ஓவியா நடிப்பில் கடைசியாக, களவாணி 2 படம் வெளிவந்தது.
— Oviyaa (@OviyaaSweetz) February 13, 2021
Facebook Comments Box