கடந்த ஜனவரி 31ம் தேதி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடந்த பாஜக ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சி நிர்வாகி கல்யாணராமன், நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இதையடுத்து அவரை கண்டித்து தமிழகம் முழுவதும் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டங்களிலும், ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நபிகள் நாயகம் பற்றி பாஜக பிரமுகர் கல்யாணராமன் அவதூறாகப் பேசியதாகப் புகார் எழுந்தது. அவருக்கு எதிராக இஸ்லாமிர்கள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த மேட்டுப்பாளையம் போலீஸார், கல்யாணராமனை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால், அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று திமுக கூட்டணி கட்சிகள் வலியுறுத்தின.
 
இந்நிலையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு கல்யாணராமனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாட்ட ஆட்சியர் ராசாமணிக்கு பரிந்துரை செய்தார். அந்தப் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட ஆட்சியர் ராசாமணி, கல்யாணராமனை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார். 
Facebook Comments Box