சசிகலாவுக்கும் கட்சிக்கும் சம்மந்தம் இல்லை என அனைவருக்கும் தெரியும். முதல்வர் கூறியதுபோல் அவர்கள் நிராகரிக்கப்பட்டவர்கள். அவர்கள் இனி கட்சிக்கு வர வாய்ப்பே இல்லை. எங்களுக்கு பயம் என்றால் என்னவென்றே தெரியாது. சசிகலா வருகையால் அச்சமா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார். 
மேலும், அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடைமையடா என வளர்க்கப்பட்டவர்கள். அந்த குடும்பத்தின் தலையீடு இல்லாமல் அதிமுக ஆட்சி மலர வேண்டும் என்பதுதான் நோக்கம்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 100 சதவீதம் எங்களோடுதான் கடைசிவரை இருப்பார் என அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக கூறியுள்ளார். திமுகவின் B டீமாக சசிகலாவும், தினகரனும் செயல்படுகின்றனர். வெளியே வந்த பின் சசிகலா, டிடிவி.தினகரனிடம் கணக்கு கேட்பார் என்பதால் அவர்தான் பதற்றத்தில் இருக்கிறார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Facebook Comments Box