அதிமுகவினர் ஒற்றுமையோடு விழிப்புடன் தேர்தல் பணியாற்ற வேண்டும் என கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது.
‘இந்தக் கூட்டத்தில் எனக்குப் பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும், அதிமுக மக்களுக்காகவே இயங்கும்’ என்ற ஜெயலலிதாவின் கனவை நனவாக்கும் வகையில் ஒற்றுமையோடு விழிப்புடன் தேர்தல் பணியாற்றி, கட்சிக்கு வெற்றியை ஈட்டுவது குறித்து இருவரும் கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை முடிந்து வெளிவந்துள்ள சசிகலா வரும் 8-ம் தேதி தமிழகம் வருகிறார். இந்த நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Facebook Comments Box