கன்னியாகுமரி மாவட்டத்தில் நீண்ட காலமாக நிலவி வந்த ஜாதி, மத மோதல்கள் நீங்கி அமைதி திரும்பி வரும் நிலையில் மண்டைக்காடு பகுதியில் 31.1.2021 அன்று நிகழ்ந்த தாக்குதல் சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று தனது கண்டனத்தினை பதிவு செய்திருக்கிறார் முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் கன்னியாகுமரி தொகுதியின் எம்.பியுமான பொன். ராதாகிருஷ்ணன்.
அவர் மேலும் இதுகுறித்து, ”காவல்துறை இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க ஆரம்பத்திலேயே அதிகாரிகளிடம் கூறிய பின்பும் தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்படாதது கண்டிக்கத்தக்கது” என்றும் தெரிவித்துள்ளார்.
”காவல்துறை இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை உடனே கைது செய்து அவர்களுக்கு தண்டனை பெற்று தர வேண்டும் என்பதுடன், மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாவண்ணம் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்”எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

pic.twitter.com/xKRnJiZUfz

— Pon Radhakrishnan (@PonnaarrBJP) February 5, 2021

Facebook Comments Box