கொரோனா தடுப்பூசியை வளர்ந்த நாடுகளுக்கு இந்தியா ஈடு கொடுத்து புதிய தடுப்பூசியை தயாரித்து ஏற்றுமதி செய்து வருகிறது. சுயசார்பு திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு வழங்கியது. இந்த பட்ஜெட் அனைத்து துறை மற்றும் மக்களின் வளர்ச்சியை முன்வைத்து பட்ஜெட் உருவாகியுள்ளது.
புதிய கல்விக் கொள்கை 15 ஆயிரம் பள்ளிகள் தேர்வு செய்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 100 சைனிக் பள்ளிகள் உருவாக்க அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டியலின மக்களின் கல்விக்கு 35 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கு வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளது. தொழிலாளர் களுக்கான வீடுகள் கட்டித்தரும் நிறுவனங்களுக்கு வரி விடுமுறை ( tax holiday)வழங்கப்படுகிறது.
பல மொழிகளை உள்ளடக்கிய இந்தியாவில் அனைவரும் அனைத்து மொழிகளையும் தங்கு தடையின்றி அறிந்து கொள்ள நேஷனல் லேங்வேஜ் டிரான்ஸ்லெஷன் மிஷன் அமைக்கப்பட்டு 4700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்து மொழி கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை அறிந்து கொள்ள அது ஏதுவாக இருக்கும். அவற்றை தமிழகத்திற்கு கொண்டு வர முயற்சிப்போம். 63 ஆயிரம் கோடி 3500 கிலோ மீட்டர் சாலைகள் அமைக்க ஒதுக்கப்ப ட்டுள்ளது.
சென்னை மெட்ரோ 119 கிலோமீட்டர் விரிவாக்கத்திற்கு 1 லட்சத்து 3 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 822 கோடி கடல் நீர் குடிநீராக்கும் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு அதிக நீதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது வேகமான வளர்ச்சிக்கு சாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது.
விவசாயிகளின் நலன் கருதியே பருத்தி இறக்குமதிக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்திய பருத்தி கழகம் மூலம் ஆன்லைனில் பதிவு செய்பவர்களுக்கு முறையாக பருத்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விலையேற்றம் என்பது வெறும் மார்க்கெட் ஏற்ற இறக்க நிலை மட்டுமே, இதனை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதிக முதலீடுகளை ஈர்க்க வேண்டிய காரணத்தால் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள துறைகளை விடுவிக்கிறோம்.
தனியாருக்கு விற்பனை செய்வதால் வேலைவாய்ப்பு பெருகுகிறது. பங்குகளை மட்டுமே விற்பனை செய்கிறோம். நிறுவனத்தை மொத்தமாக தனியாருக்கு வழங்குவதில்லை. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கவே மூன்று விவசாய சட்டங்களை பிரதமர் கொண்டு வந்துள்ளார். அதையும் விடுவதில்லை, கடனும் வழங்கக்கூடாது என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவிப்பது முரணாக உள்ளது. விவசாயிகளின் போராட்டத்திற்கு பின் உள்ளவர்கள் யார் என்பது அனைவருக்கும் தெரியும். 80 சதவீத விவசாயிகள் இச்சட்டத்திற்கு ஆதரவாக உள்ளார்கள். மக்களுக்கு நல்லது செய்யவே மக்கள் பாஜகவை தேர்ந்தெடுத்துள்ளனர். மக்களின் நலனுக்காக பாஜக ஆட்சி செய்து வருகிறது.
7 பேர் விடுதலை என்பது நீண்ட கால பிரச்சனை. கவர்னர் தற்போது குடியரசு தலைவருக்கே அதிகாரம் உள்ளது என தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் ஒரு கட்சியாக நாங்கள் கருத்து தெரிவிக்க
முடியாது. தமிழகத்தில் பாஜகவிற்கு 1 எம்பி கூட இல்லை என்றாலும் 5 லட்சத்து 30 ஆயிரம் கோடியை இதுவரை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. எந்த மாநிலத்தையும் பாஜக புறக்கணிப்பது கிடையாது. 500 மீனவர்களை தங்கள் ஆட்சியில் கொன்று குவித்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அதைப்பற்றி பேச அருகதை இல்லை. பாஜக ஆட்சியில் ஆழ்கடலில் மீன் பிடிக்க 2 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. காவிரி பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது.
முடியாது. தமிழகத்தில் பாஜகவிற்கு 1 எம்பி கூட இல்லை என்றாலும் 5 லட்சத்து 30 ஆயிரம் கோடியை இதுவரை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. எந்த மாநிலத்தையும் பாஜக புறக்கணிப்பது கிடையாது. 500 மீனவர்களை தங்கள் ஆட்சியில் கொன்று குவித்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அதைப்பற்றி பேச அருகதை இல்லை. பாஜக ஆட்சியில் ஆழ்கடலில் மீன் பிடிக்க 2 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. காவிரி பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தமிழர்கள் நிம்மதியாக வாழ ஒரே காரணம் பிரதமர் மோடி மட்டுமே. நிலையான உறுதியான தலைமையினால் தான் இது சாத்தியமானது. தமிழகத்தில் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அதிமுகவிற்கு தான் கூட்டணியில் முக்கிய முடிவெடுக்க முழு அதிகாரமும் உள்ளது. அனைத்து ரயில்களும் ஏ.சியாக மாற்றப்படாது. சாதாரண பெட்டிகளுடனும் இயங்கும் என பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
Facebook Comments Box