கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றிருந்த விவசாயிகளின் வேளாண் பயிர்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பை வரவேற்று ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில் அதிமுக ஒன்றிய செயலாளர் வளவனூர் எஸ் அன்பழகன் தலைமையில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள். இதில் ஒன்றிய அவைத்தலைவர் அரங்கநாதன், மாவட்ட பிரதிநிதி பாலாஜி உள்பட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஆற்காடு மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் ஆற்காடு தோப்பு கானா தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அருகில் ஒன்றிய செயலாளர்தாழனூர் என் சாரதி தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள்.
இதில் ஒன்றிய அவைத்தலைவர் வேப்பூர் மணி துணை செயலாளர் சங்கர், பொருளாளர் பாஸ்கரன், மாணவரணி செயலாளர் குலசேகரன், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Facebook Comments Box