கொருக்குப்பேட்டை, அனந்தநாயகி நகரைச் சேர்ந்த பூபாலன், அதேப் பகுதியைச் சேர்ந்த ரஜிதா என்பவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் இந்த காதலுக்கு அவரது தாய் வெங்கட்டம்மா எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், ரஜிதாவுக்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய வெங்கட்டம்மா முடிவு செய்ததால், அதிருப்தியில் இருந்துள்ளார் பூபாலன்.
இந்த நிலையில், ரஜிதாவின் வீட்டில், தாய் வெங்கட்டம்மா, ரஜிதா, காதலன் பூபாலன் ஆகியோர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
தாய் மற்றும் மகளை எரித்துக் கொன்ற பூபாலன், தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 
Facebook Comments Box