சேலம் மாவட்டம், சங்ககிரி மலையில்  உள்ள அருள்மிகு சொர்ண ஆகாஷ்ன பைரவர், தட்சின காசி பைரவர் சுவாமிகளுக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி இன்று மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 
சங்ககிரி மலையில் உள்ள 2வது மண்டபத்தில்  தெற்கு திசை நோக்கி அருள்மிகு சொர்ண ஆகாஷ்ன பைரவரும், மேற்கு திசை நோக்கி அருள்மிகு  தட்சிண காசி பைரவரும்  உள்ளனர்.
இரு சுவாமிகளுக்கும் தேய்பிறை அஷ்டமியையொட்டி பால், தயிர், மஞ்சள், சந்தனம், திருமஞ்சனம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு  பூஜைகள் நடைபெற்றன. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமிகளை வழிப்பட்டுச் சென்றனர்.
Facebook Comments Box