திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் குமாரச்சேரி கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் யோவான் (வயது 25). இவரது சகோதரர் ஏசான் (22). அந்த பகுதியில் கூலி வேலை செய்து வந்தார்கள். ஏசானுக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் சொல்கிறார்கள்.
நேற்று முன்தினம் சகோதரர்கள் இருவரும் வீட்டில் இருந்தனர். அப்போது திடீரென ஏசான் தான் வைத்திருந்த கத்தியால் யோவானின் தலை மற்றும் கழுத்து பகுதியில் வெட்டினார். பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏசானை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது யோவான் அளித்த வாக்குமூலத்தில் சில விஷயங்களை குறிப்பிட்டார், அதை இங்கு பார்ப்போம். நான் சில வருடம் முன்பு நெல்லூரில் துணிக்கடையில் வேலை செய்து வந்தேன். அப்போது அனுஷா என்பவரை காதலித்தேன். அவரை 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டேன். பின்னர் நெல்லூரில் வீடு எடுத்து வசித்து வந்தேன்.
எனது சகோதரர் யோவான் பெயிண்டிங் வேலை செய்து வந்தார். கடந்த மார்ச் மாதம் குமாரச்சேரிக்கு வந்து தங்கினோம். இந்த நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பு யோவான் ஊருக்கு சென்று அங்கு என் மனைவிக்கு பிறந்தநாள் கேக் வாங்கி கொடுத்து கொண்டாடினார்.
இதனால் அவர் மீது எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த நான் எனது மனைவியுடன் எனது அண்ணன் தொடர்பில் இருப்பதாக கருதி அவரை நான் சரமாரியாக வெட்டிக் கொன்றுவிட்டேன் என்றார். மப்பேடு போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
Facebook Comments Box