உணவுதுறை அமைச்சர் காமராஜின் உடல் நிலை குறித்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்;- காமராஜ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மற்றும் அரசு மருத்துவர்கள் குழுவின் உழைப்பின் காரணமாக உடல் நலம் தேறியுள்ளார். 95% நுரையீரல் பாதிப்புடன் இருந்த அவர் மறுபிறவி எடுத்துள்ளார். இன்று மாலை அல்லது நாளை காலை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். 
மேலும், சவாலான இந்த சிகிச்சை எங்களுக்கு ஒரு அனுபவம். இவ்வளவு பாதிப்பு இருந்த ஒருவரை மீட்க முடியும் என்ற நம்பிக்கை வந்துள்ளது. முழு உடல் நலமுடன் அமைச்சர் காமராஜ் உள்ளார். இன்னும் 3 வாரங்களில் அவர் மக்கள் பணியில் ஈடுபடுவார். மக்கள் பிரதிநிதி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அமைச்சர் காமராஜ் ஒரு உதாரணம் என்று தெரிவித்தார்.
Facebook Comments Box