Home Tamil-Nadu மதக்கலவரம் செய்ய திட்டமிடும் நபர்களை உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்… எல்.முருகன்

மதக்கலவரம் செய்ய திட்டமிடும் நபர்களை உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்… எல்.முருகன்

0

 

சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த பலர், எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எல். முருகன்;- தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் பாஜக சார்பில் மத்திய பட்ஜெட் விளக்கக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது. தமிழ்நாட்டின் நலன் கருதி, மாநிலத்துக்கு அதிக திட்டங்கள், நிதி ஒதுக்கீடு போன்றவை பட்ஜெட்டில் தரப்பட்டுள்ளதாகவும், இதை ஏற்றுக்கொள்ள எதிர்க்கட்சிகளுக்கு மனமில்லை என்று குற்றம்சாட்டினார். 
மேலும், எந்த மதத்தையும், தனி நபரையும் கொச்சைப்படுத்தக் கூடாது. பாஜக எந்த மதத்துக்கும் எதிரான கட்சி அல்ல என்றும், மதக்கலவரம் செய்ய திட்டமிடும் நபர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். சசிகலா வந்தால் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுமா என்ற கேள்விக்கு எல்.முருகன், சசிகலா தமிழ்நாடு வந்த உடன் பார்க்கலாம் என்று கூறினார்.
Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here