சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சமீப காலமாக தங்கம் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள், சுங்கத்துறை அதிகாரிகளால் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
இந்த நிலையில் தனியார் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை சோதனைக்கு உட்படுத்தியதில் ரூ.21.74 லட்சம் மதிப்பிலான 430 கி. தங்கம் மலக்குடலில் வைத்து கடத்தி வந்தது கண்டறியப்பட்டது.
இந்நிலையில் கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Facebook Comments Box