%25E0%25AE%25B5%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AF%258D%2B%25E0%25AE%259A%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%259A%25E0%25AE%25AA%25E0%25AF%2588%2B%25E0%25AE%25A4%25E0%25AF%2587%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25B2%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AF%258D%2B%25E0%25AE%2585%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25AE%25E0%25AF%2581%25E0%25AE%2595 வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக-பா.ஜ.க கூட்டணி உறுதி... தலைவர் ஜே.பி.நட்டா
சட்டசபை தேர்தலில் அதிமுக பா.ஜ.க இணைந்து போட்டியிடும். தமிழகம் தேசிய நீரோட்டத்தில்இணைய வேண்டும். அதற்காக பா.ஜ.கவை ஆதரிக்க வேண்டும்.
பா.ஜ.க ஆட்சியில் சென்னை திருச்சி, சேலம் உள்ளிட்ட இடங்களில் வேலை வாய்ப்புகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரைக்கு அதிகளவில் வளர்ச்சி கட்டமைப்பு அளிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி செல்லுமிடங்கள் எல்லாம் தமிழ் மொழியின் சிறப்புகளை மேற்கோள் காட்டி பேசி வருகிறார்.
பா.ஜ.க நடத்திய வேல் யாத்திரை இரண்டு வெற்றிகளை தந்துள்ளது. முதலாவது தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வேல்-ஐ தூக்கியது. 
தைபூசத்திற்கு தமிழக அரசு பொதுவிடுமுறை வழங்கியது. இதற்காக தமிழக முதல்வர் பழனிசாமிக்கு நன்றி .
64 திருவிளையாடல்களும் நடந்த பூமி மதுரை. பாதுகாப்பான இந்தியாவை உருவாக்க பா.ஜ.கவை வலுப்படுத்த வேண்டும். பா.ஜ.கவின் அழுத்தத்தால் ஸ்டாலின் வேலை தூக்கும் நிலை உருவானது. நெசவுத்தொழிலுக்காக தமிழகத்திற்கு ரூ.1,600 கோடி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திற்கு வந்த பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி,சட்டை அணிந்து வந்தார். மேலும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என தமிழில் பேசினார்.

The post வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக-பா.ஜ.க கூட்டணி உறுதி… தலைவர் ஜே.பி.நட்டா appeared first on தமிழ் செய்தி.

Facebook Comments Box