சென்னை மெரீனா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள ‘நம்ம சென்னை’ என்ற செல்ஃபி மையத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார்.
சென்னையின் பெருமை மற்றும் மாண்பை போற்றும் விதமாகவும், அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையிலும் ரூ.24 லட்சம் செலவில் நம்ம சென்னை செல்ஃபி மையம் திறக்கப்பட்டுள்ளது.
மேலும், மாநகராட்சியின் சீர்மிகு திட்டத்தின் கீழ் 2-ம் கட்ட மின்னணு சைக்கிள் திட்டத்தையும் முதல்வர் கொடி அசைத்து தொடக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து மின்னணு சைக்கிள்களை பெண்கள் மற்றும் சிறுவர்கள் இயக்கினர். மேலும் சென்னையின் பல்வேறு இடங்களில் ஆயிரம் மின்னணு சைக்கிள்கள் கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ‘நம்ம சென்னை’ என்ற செல்ஃபி மையத்தை முதல்வர் எடப்பாடியார் திறந்து வைத்தார் appeared first on தமிழ் செய்தி.
Facebook Comments Box