%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%259A%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AF%2586%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AF%2582%25E0%25AE%25B0%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AF%258D%2B%25E0%25AE%25AA%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AF%258D%2B%25E0%25AE%2595%25E0%25AE%25B5%25E0%25AE%259F%25E0%25AE%25BF.... தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூரில் பக்தர்கள் சுவாமி தரிசனம்....
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் முக்கிய விழாவில் ஒன்றான தைப்பூசத்திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு திருக்கோவில் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 8.30 மணிக்கு தீர்த்தவாரியும், காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகமும் நடைபெற்றது.
 
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூருக்கு கடந்த சில நாள்களாக திருச்செந்தூருக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து சுவாமி தரிசனம் செய்த வண்ணம் இருந்தனர். இதனால் திருக்கோவில் வளாகமே பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

The post தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூரில் பக்தர்கள் சுவாமி தரிசனம்…. appeared first on தமிழ் செய்தி.

Facebook Comments Box