டாக்டர்கள் நர்ஸ்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள் விபரங்கள் ‘கோவின்’ செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொருவரும் எந்த தேதியில் எந்த நேரத்தில் எந்த மையத்தில் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி குறிப்பிட்டதேதியில் தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்களுக்கு மீண்டும் முன்னுரிமை வழங்கப்படாது. அவர்களின் பெயர்கள் பட்டியலில் கடைசி இடத்துக்கு சென்று விடும். அவர்கள் கடைசியில் தான் தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியும்.
சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நிறைவடைந்த பின் அடுத்தகட்ட முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி துவங்கும். அதன்படி 1.10 லட்சம் காவல் துறையினர் 70 ஆயிரம் உள்ளாட்சி ஊழியர்கள் உட்பட 2 லட்சத்துக்கும் மேற்பட்ட களப் பணியாளர்கள் கணக்கெடுக்கப்பட்டு உள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post பணியாளர்கள் கொடுக்கப்பட்ட நேரத்தில் தடுப்பூசி போட்டு கொள்ளாவிட்டால் முன்னுரிமை அளிக்கப்படாது appeared first on தமிழ் செய்தி.

Facebook Comments Box