கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பாகலூர் சாலையில் செயல்படும் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில், நேற்று( ஜன.,22) காலை 9: 30 மணிக்கு வாடிக்கையாளர் போல் வந்த ஆறு பேர் துப்பாக்கி மற்றும் கத்தி முனையில் ரூ.10 கோடி ரூபாய் மதிப்புள்ள 25 கிலோ தங்க நகைகள் மற்றும் 90 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவங்கள் அனைத்தும் பைனான்ஸ் நிறுவனத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. குற்றவாளிகளை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இதனிடையே, கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய 6 பேர், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே சம்சாத்பூர் என்ற இடத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் ம.பி., மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. அவர்களிடம் இருந்து 8 துப்பாக்கிகள், கத்தி, ரூ.12 கோடி மதிப்பு நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
கொள்ளை குற்றவாளிகளை பிடித்த போலீசாருக்கு முதல்வர் பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.18 மணி நேரத்தில் குற்றவாளிகளை பிடித்த கிருஷ்ணகிரி போலீசாரை பாராட்டுகிறேன். இது காவல்துறையின் மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post ஓசூரில் 25 கிலோ நகை கொள்ளை…! ஐதராபாத்தில் கைது…! 12 கோடி மதிப்புள்ள நகைகள் பறிமுதல்…! appeared first on தமிழ் செய்தி.

Facebook Comments Box