நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை கைது செய்ய சிபிசிஐடி போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

கடந்த மாதம் 11ம் தேதி, தனது மகளை மிரட்டி சொத்து வாங்கியதாக, கரூர் காவல் நிலையத்தில் பிரகாஷ் புகார் அளித்தார்.

இதுகுறித்து, 7 பேர் மீது 8 பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கில் தனது பெயர் சேர்க்கப்படலாம் என கருதிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சண்முகசுந்தரம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வரும் நிலையில், வட மாநிலத்தில் இருப்பதாகக் கூறப்படும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை கைது செய்ய சிபிசிஐடி சிறப்புப் படை போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Facebook Comments Box