செங்கோலை எதிர்ப்பதன் மூலம் தமிழ் கலாச்சாரத்தை திமுக எதிர்க்கிறது என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “செங்கோல் கொடுங்கோன்மையின் சின்னம் அல்ல” “செங்கோல் ஜனநாயகத்தின் சின்னம்” இதுவரை எந்த தமிழ் மன்னனும் மக்கள் ஆட்சியை மீறி ஆட்சி செய்ததில்லை.

எனவே நாடாளுமன்றம் அப்படி இருக்க வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நிறுவினார். கொடுங்கோல் ஆட்சி செய்யும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இந்த செங்கோலின் தன்மையும் புனிதமும் தெரியாது என்பதை இன்று வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

திராவிட முன்னேற்றக் கழகம் செங்கோலை எதிர்ப்பதன் மூலம் தமிழ் கலாச்சாரத்தையே எதிர்க்கிறது, அரசியலுக்கு எந்த கீழ்த்தரமான கருத்துக்களையும் திராவிட முன்னேற்றக் கழகம் வெளிப்படுத்தும் என்பதற்கு இதுவே சான்று.

சமாஜ்வாடி காட்சியை சேர்ந்தவர்கள் எதிர்க்கலாம் ஆனால் நம் தமிழகத்தை சேர்ந்தவர்கள்? திராவிட முன்னேற்றக் கழகத்தின் உண்மைப் பொய் முகம் இன்று அம்பலமாகியுள்ளது. தமிழும், தமிழ் கலாச்சாரமும் அவர்களின் அரசியலுக்காகவே தவிர, உணர்வுகளுக்காக அல்ல என்றார் தாழிசை.

Facebook Comments Box