ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேரை கைது செய்துள்ளோம், அவர்கள்தான் உண்மையான குற்றவாளிகள் என்றும், 8 பேரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளோம் என்றும் வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கர்க் தெரிவித்தார்.

தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் (வயது 52). இவர் சென்னை பெரம்பூர் வேணுகோபால் சாமி தெருவில் புதிய வீடு கட்டி வந்தார். அவருடைய பழைய வீடு இங்கேதான் இருந்தது. இதை இடித்துவிட்டு புதிய வீடு கட்டினார். இந்நிலையில் நேற்று மாலை இங்கு வந்த ஆம்ஸ்ட்ராங்கை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டி படுகொலை செய்தது.

மேலும் அருகில் இருந்த 2 பேரையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினர். சென்னையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் கட்சியின் மாநில தலைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து போலீசார் 8 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில் கொலை நடந்த 4 மணி நேரத்தில் 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டது. மேலும் சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர். இந்நிலையில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் என்றும், 8 பேரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளோம் என்றும் வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கர்க் தெரிவித்தார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கர்க் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உணவு விநியோக ஊழியர்களின் ஆடைகள், ரத்தக்கறை படிந்த அரிவாள்கள், 3 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பிறகே கைது செய்துள்ளோம். கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள். கைது செய்யப்பட்ட 8 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளோம்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 3 பேரை பிடித்துள்ளோம். உடனடியாக கைது செய்யப்படவில்லை. அனைத்து சூழ்நிலைகளையும் ஆராய்ந்த பிறகே கைது செய்துள்ளோம். ஏதேனும் எதிர் ஆதாரம் இருந்தால் தாராளமாக வந்து அதிகாரிகளிடம் கொடுங்கள்.. ஆதாரம் இல்லாமல் சொல்லாதீர்கள். எங்களிடம் ஆதாரம் உள்ளது. இதுவரை பிடிபட்ட 3 பேர் கூட கைது செய்யப்படவில்லை. விசாரணைக்கு பின் ஆதாரம் இருந்தால் மட்டுமே கைது செய்வோம். அவர் கூறியது இதுதான்.

Facebook Comments Box